செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

பகற்பந்தி

வானப் பசிக்கு
நட்சத்திரப் பொரி...
நிலாப் பொட்டலம்...
மின்சார விள்ளல்
எதுவும்
நிறைப்பதில்லை...
கிழக்குச் சமையல்
எப்போது முடியும்...?

கவலை

      இப்படித்தான் தொடங்கும்...

பனிப் பொட்டு..
சிறு தூரல்...
கடும் சாரல்...
பேய் மழை...
     
      கரையாதிருந்த...
      நான்
      காணவேயில்லை...

கையளவு ஊற்று...
தவழும் நீர்...
கரை தொடும் ஓட்டம்...
கடும்புனல்...
    
      நனையாதிருந்த
      நான்
      நதியின் சுழலுக்கு இரை..!

கண்ணாமூச்சி

துணியோ...
கதவோ...
திரைச்சிலையோ...
எதுவும் இல்லாவிடில்...
ஒற்றைக்கையோ...
பாவனையோ...
மறைத்து..
அம்மா காணோமே...
பாப்பா காணோமே...
வாய் கொள்ளா...
சிரிப்போடு...
தோ இருக்கே...
வாரித் தழுவும்
குழந்தையிடம்
எப்படிச் சொல்வது
இதுதான் வாழ்க்கை என்று...

செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

பயனிலா...?


சிக்கலான
நூல்கண்டாகச்
சிதறிக்கிடக்கும்
சொற்களை
எழுத்துக்களாக்கி
இழுத்துப்பிடிக்க
இரு கை போதாது ...


உதவிக்கு அழைத்தால்
மறுக்கிறீரா...?
நேரம் கேட்கிறீரா ...?
மறுமொழி...கேட்கவில்லை..!
ஒ...
செவி கிடக்கிறது ......
சிக்கிய நூல்கண்டுக்குள்....
மாறாதது ...


மண்..
நீர்...
விதை...
பயிர்...
   ^
மண்  ..
நீர்...விதை...
பயிர்..
^
கல்..
மண்...
கான்க்ரீட்...
?

kural: amma

kural: amma: "ammaa"

amma

ammaa

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...