சனி, நவம்பர் 26, 2011

மழை காரணமாக...

கண்ணாடிக்கு வெளியே
மோனச் சீறலோடு
இறங்கியது மழைச்சரம்...

நிறம் கொண்டு நேரம்
சொல்ல  விடாமல்
வானம் கருப்பும் வெளுப்புமாய்
உள்ளே-வெளியே....

கணிப்பொறி, தொலைக்காட்சி 
எல்லாம் ஊமையாகிக் கிடக்க...

அபிதா என்ன செய்வாள்?
நாய்க்குட்டி படத்துக்கு 
வண்ணம் தேடுவாளோ...

மேல்தட்டு சாவிகடிகாரம் 
திருகுவது 
அவள் நீண்டநாள் ஆசை...

தின்பண்ட ஜாடி 
உருளாமல் திறக்க...
சிதறாமல் தின்ன...

ப்ச் ...
அவள் 
கார்டூன் போலவோ 
என் கடவுள் போலவோ 
அங்கு ஒன்று தோன்றவும் இல்லாமல் 
இங்கிருந்து நீளவும் இல்லாமல்

கணினி தடடுவதேன்
என் கரம்? 

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். அருமையான கவிதை. தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி..!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

உமா மோகன் சொன்னது…

nandri thozhar!varugaikum vaazhthukkum.....

கீதமஞ்சரி சொன்னது…

கூட்டுக்குஞ்சை நினைத்துப் புழுங்கும் மழைக்குருவியின் தவிப்பைப் போல், தான் வீடு திரும்புமுன், வீடு திரும்பிய குழந்தையை நினைத்து உழலும் தாய் மனத்தை அழகாய்ப் படம் பிடித்துக் காட்டிய கவிதை. பாராட்டுகள்.

உமா மோகன் சொன்னது…

mikka nandri geetha

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...