செவ்வாய், பிப்ரவரி 07, 2012

அபி உலகம்-4

அபி குளிக்கவில்லை
இன்னும்...
அப்பா சொன்ன ஆறு 
...
வேண்டுமாம் !
அடுக்ககத்தின் 
ஆறாம் தளத்தில் 
நாலுக்கு ஆறு
குளியலறை வாசலில் 
நடக்கிறது போராட்டம்!
**************************************
மின்விசிறிக்கு 
 
நேராய்ப் படுத்ததால் 
சளி பிடிக்குமென்றாள்
அம்மா...
கரடிக்கும் ஒரு குல்லா 
வேண்டுமென 
கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டாள்
அபி ......
தனக்குக் குளிரவில்லை என 
பொம்மைகள் மேல் போர்த்தியபடி !
**************************************
எட்டுமணி ரயிலுக்கு 
சீட்டு வாங்கிய 
அப்பாவைக் கடிகிறாள் அபி 
"ஒம்பது மணிக்குதானே 
ஜோஜோ வரும் 
சொல்லிக்கொள்ளாமல் 
எப்படிக் கிளம்புவது?.....  ,
ஜோஜோ தினம் வரும் 
பூனை.
 

2 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

அபியின் உலகம் அலாதிதான். ஆறு கேட்பது அவள் தவறில்லை. அப்பா அதுபற்றி அவளிடம் பிரஸ்தாபித்ததுதான் பெருந்தவறு.

அபிக்குள் இருக்கும் அத்தனைக் கவிதைகளையும் எழுத்தில் கொண்டுவருவது உங்கள் தனித்திறனே. பாராட்டுகள் சக்தி.

ஹ ர ணி சொன்னது…

சக்தி..

குழந்தைகளின் உலகம் என்றும் காற்றைபோல சுகந்தமானது. அது மனித வாழ்வின் உயிர்ச்சங்கிலி. அபியைப் போன்ற பல அபிகுட்டிகளுக்கு நாம் ஆறு...குளம்..வாய்க்கால்..மதகு எனப் பலவற்றை அதனதன் அழகியல் இன்பமுடன் அறிமுகம் செய்யவேண்டும். நதியை நாம் அடுக்கத்திற்கு கொண்டு செல்லமுடியாது தொலைத்துவிட்ட ஒரு இழப்பினுர்டாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

ஆனால் ஒருமுறையேனும் அவற்றைக் குழந்தைகளுக்குக் காட்டுவோம். இல்லையெனில் அவை வரலாற்றின் பக்கங்களில் வண்ணப் படங்களாகவே உயிரற்று இருந்துவிடும்.

குழந்தைகளும் பொம்மைகளும் என ஒரு நாவலே எழுதலாம். அத்தனை இருக்கின்றன. எதைத்தான் விடுவது? ஏக்கப் பெருமூச்சு வருகிறது. எல்லாவற்றையும் எழுதிவிட முடியாதா என்று பேராசையின் விரிவால்.

இனி தொடர்ந்து வருவேன் சக்தி.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...