வியாழன், ஜூலை 12, 2012

அப்பு,நீ என்னவாகப் போறே....


யாருமே விஞ்ஞானம் படிக்கலியாம்
அதனால்,
அப்பு விஞ்ஞானியாகட்டும்
என்கிறாள் அம்மா.
"ஊர்ப்பிள்ளைங்க எல்லாம் 
கம்ப்யூட்டர் படிச்சு 
கைநிறைய வாங்கையில 
நம்ப பிள்ள கொறஞ்சு போகலாமா....?"
பாட்டியின் கேள்வி.
"கோடிகள் சேர்க்க 
என்னாலாகாது .....
மெரிட்ல கிடைச்சா 
டாக்டராகட்டும்"-அப்பா...
அவ்வப்போது வந்துபோகும் 
அத்தையும் ,மாமாவும் கூடச் 
சொல்கிறார்கள் -
கப்பலோ விமானமோ 
ஓட்டப்படி"-என்று...
அப்பு விரும்புவது 
சூப்பர்மேன் அல்லது பேட்மேன் வேலை...
பாடிக்கொண்டே திரியும் 
எதிர்ச்சாரி 
டீக்கடைச் சிறுவன் ஆக
விரும்புவதை 
அப்பு யாரிடமும் சொல்வதில்லை...

2 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

குழந்தைகளின் கனவுகளும் ஆசைகளும் என்றைக்கு தைரியமாய் வெளிப்படும் சூழல் நேருமோ அன்றுதான் வாழ்க்கை ஒளிமயமாகும்... அவர்களுக்கு. சமூக சிறைக்கூடங்களின் கைதிகளைப் பற்றிய கவிதை நிறைய யோசிக்கவைக்கிறது. பாராட்டுகள் சக்தி.

உமா மோகன் சொன்னது…

ஆம் கீதா வருகைக்கும் உணர்வுபூர்வ பகிர்வுக்கும் நன்றி

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...