திங்கள், பிப்ரவரி 23, 2015

சமீபத்திய கவிதைகள் -2

அந்தக் குறுவாள்
உன்னுடையதா...
என்னுடையதா....
*********************************
இந்த நொடிமட்டும்தான்
கைவசம் என்றேன் 
அதற்கும் 
கைநீளும் என்பதறியாமல்
***************************************
அந்த வீதியின் 
மகிழம்பூக்கள் 
நினைவில் காய்ந்து கொண்டு....
நடத்தல் சாத்தியமில்லை
*********************************
நான் கேட்டதும் 
நீ கேட்டதும் 
ஒரே பாடல் என்றாலும் 
ஒரே பாடல் இல்லை*
*****************************************
வீடு பூட்டும் கவலை 
ஏதுமின்றி 
தேர் ஏறிவிட்ட சுவாமி 
காத்திருக்கிறார்
*****************************
இக்கணத்தின் கைப்பு 
மறக்க 
அக்கணம் வேண்டியிருக்கிறது 
அக்கணமும் 
கைப்பு தளும்பியது 
இக்கணம் உறைக்கவில்லை.
இக்கணமும் அக்கணம் ஆகலாம்

சமீபத்திய கவிதைகள் சில

-- என்னைத் தாண்டிய 
எறும்பு 
நிழலையும் ....
நான் ?
#################################

ஒரு குரோதம் 
ஒரு புன்னகை 
ஒரு விரக்தி 
ஒரு ஏக்கம் 
................
............
ரயில் பெட்டி போல்
யார் இவற்றைக்
கோர்த்தது
தடதடத்துக் கொண்டிருக்கிறேன்

#####################################
அச்சச்சோ 
சொல்வாய் எனத்தான் நினைத்தேன் 
வேர் இருக்குமென்றே 
நினைத்ததில்லை என்கிறாய் 
சுருட்டி விசிறிய லாவகம்தான் 
மளுக்கென கண் உடைக்கிறது
#########################################
வலியை உற்றுநோக்குவதுபோல் 
கொண்டாட்டத்தை 
உற்று நோக்கத் தோன்றியதில்லை 
நீயும் சொன்னதில்லை 
முழுநிலவுக்கும் 
சற்றே படபடப்பு இருக்கும்போல
நாளைமுதல்
கொஞ்சமேனும் ஒளித்துக்கொள்ள
வேண்டியிருக்கே என...
##############################
வரலாறு முக்கியம்தான் 
தையல் பிரிந்த 
ஆடை பற்றியே அவதானிக்காது
சற்றே திரும்பிப்பார் வரலாற்றை 
வந்துசேரும் ஊசிநூல் 
ஆடையோடு நிற்காவிட்டால் என்ன
தைக்கப்பட்ட உதடுகளோடும்
வரலாற்றைத்
திரும்பிப்பார்க்க முடியும்
படம் ;ராஜி சுவாமிநாதன்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...